ஜெய்பீம் 2.0

  •  ஜெய்பீம் 2.0 செயல்திட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வவொரு கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள மக்களிடையே அம்பேத்கரின் சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் கனவுச் செயல்திட்டமாகும்.
  •  இத்திட்டத்தின்படி முதலில் அம்பேத்கரியம் தொகுதிகளை வாங்கும் தோழர்கள் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமம் அல்லது குடியிருப்புப்பகுதி அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைந்துள்ள அப்பகுதியில் ஏற்னெவே செயல்பட்டுவரும் அம்பேத்கர் / பெரியார் / பண்டிதர் / திருமா ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட உள்ள சிறு நூலகம் அல்லது படிப்பகத்தினைத் தத்தெடுக்க வேண்டும்.
  •  அப்படி தேர்வு செய்த அம்பேத்கரியம் தொகுப்பு – 50 நூல்களை நன்கொடையாக வழங்க வேண்டும்.
  •  படிப்பகங்கள் இல்லாத பகுதிகளில் புதிய படிப்பகங்களை உருவாக்க அப்பகுதியில் உள்ள தோழர்களை ஊக்குவித்து புதிய படிப்பகங்களைத் திறக்க முயல வேண்டும். பிறகு அங்கே அம்பேத்கரியம் தொகுதிகளை நன்கொடையாக வழங்க வேண்டும்.
  •  ஒருவர் தமது சக்திக்கு ஏற்ப எத்தனை படிப்பகத்தினையும் தத்தெடுக்கலாம். அதேபோல தோழர்கள் இணைந்தும் தத்தெடுக்கலாம். இவர்களின் பெயர்கள் www.jaibhimfoundation.net வலைப்பக்கத்தில் முழுமையான தகவல்களுடன் பதிவிடப்படும்.
  •  அம்பேத்கரின் சிந்தனைகளை மக்களிடம் சேர்க்கும் இத்திட்டத்தில் புத்தகங்களை வாங்கி நன்கொடையாக அளிப்பவர்கள் ஜெய்பீம் 2.0 திட்டத்தில் அங்கத்தினர்களாக இருப்பார்கள். அவர்கள் “அம்பேத்கரிய தூதுவர்” என்று எழுச்சித் தலைவர் டாக்டர்.திருமாவளவன் அவர்களால் சான்றளிக்கப்படுவார்கள்.
  •  இந்த அம்பேத்கரிய தூதுவர்களுக்கு முறையான வழிக்காட்டுதல்கள் எழுச்சித் தலைவர் அவர்களின் வழிக்காட்டலில் தொடர்ந்து வழங்கப்படும். அது நேரடியாகவும், இணையத்தின் வாயிலாகவும் இருக்கும். அதன் தொடர் வழிகாட்டலை www.jaibhimfoundation.net இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.